தேவகோட்டை ராம் நகர் மளிகை கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவர் தீபாவளி உணவு தயாரிப்பதற்காக தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள மளிகை கடையில் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான அணில் மார்க் கம்பெனி தயாரித்த சேமியா பாக்கெட் வாங்கி உள்ளார்.
இந்நிலையில், பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்த போது,அந்த பாக்கெட்டுக்குள் இறந்த நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார். “பிரபல கம்பெனி பேக்கிங் செய்து கொடுத்த சேமியாவை தான் வாங்கி விற்பனை செய்தேன். பிரபல கம்பெனி என்பதால் நம்பிக்கையுடன் வாங்கி விற்பனை செய்தது தவறுதான்,” என்று வருந்தியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், சிறிய கம்பெனிகள் மட்டுமே பாதிக்கப்படும் நிலையில் பெரிய கம்பெனிகளின் தவறுகள் மறைக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் காக்க உணவு பாதுகாப்புத் துறையினர் விழித்துக் கொண்டு குறைந்த அளவு பாதுகாப்பையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, “தொழிற்சாலையில் தவறு நடக்க வாய்ப்பில்லை” என வாடிக்கையாளரின் புகாருக்கு அணில் சேமியா விற்பனை மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.