இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து இசையில் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான்.
அனிருத் இசைப்பயணம்:
சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இந்த படங்களில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பி இருந்தது. அதேபோல் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் அனிரூத் இசை அமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.
அனிருத் இசை அமைத்த படங்கள்:
பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதிலும் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம்.
அனிருத் இசை அமைக்கும் படங்கள்:
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அனிருத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, அயலான், திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் இசையமைப்பது மட்டும் இல்லாமல் இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அனிருத் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்:
தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி பட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அனிருத் வீட்டில் துக்க சம்பவம் நடந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அனிருத்தின் தாத்தா எஸ். வி. ரமணன் அவர்கள் தான் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவர் சினிமாவுலகில் இயக்குனரும், இசையமைப்பாளராகவும் இருந்தவர். அனிருத் தாத்தா இறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அனிருத் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.