விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிக்க காரணம் அனிருத்.? ஒரு வேல அது நடந்திருந்தா.?

Author: Rajesh
7 May 2022, 12:26 pm

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களாக படங்களில் கலக்கியதோடு, நடிப்பிலும் கலக்கி வருபவர்கள தான் விஜய் ஆண்டனி, ஜிவிபிரகாஷ். இருவரும் பல திரைப்படங்களில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். அதேபோல் இளம் இசையமைப்பாளரான அனிருத்தையும் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் முயற்சி செய்துள்ளார.

அனிருத் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர பல டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தான், இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க அனிருத்தை அனுகி இருக்கிறாராம். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தில் தான் அனிருத்தை ஹீரோவாக நடிக்க விக்னேஷ் சிவன் கேட்டுள்ளாராம்.

இந்த படத்தின் கதை அனிருத்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால் ஹீரோவாக நடிக்க தயக்கம் இருந்ததாலும், அந்த சமயத்தில் விஜய்யின் கத்தி படத்தில் பிசியாக இருந்ததாலும் அனிருத் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதனையடுத்து பல ஹீரோக்களிடம் கதை சொல்லிய விக்னேஷ் சிவனுக்கு இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் ஓகே சொன்னாராம். ஒரு வேலை நானும் ரவுடி தான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடித்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு வேல அந்த சம்பவம் நடந்திருந்தால். விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்திருக்கவே மாட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1018

    0

    0