அனிருத்துக்கு அடுத்த வாய்ப்பு : விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 12:41 pm

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

ധനുഷും ഐശ്വര്യയും വേര്‍പിരിയുന്നു; സ്വകാര്യതയെ മാനിക്കണമെന്ന് അഭ്യര്‍ഥന |  dhanush and aishwarya divorce press release through social media

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

No plans to direct my father Rajinikanth or husband Dhanush yet: Aishwaryaa  | Entertainment News,The Indian Express

இதனிடையே, இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Aishwarya Rajinikanth directs music video for Valentine's Day – Viral film  | Reading Sexy

காதலர் தினத்தன்று வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விவாகரத்துக்கு பின் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேளைகளில் கடும் பிசியாக உள்ளனர்.

நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக மியூசிக் வீடியோ ஒன்றை தனது குழுவுடன் இணைந்து இயக்கி வருகிறார்.

In collaboration with Prerna V Arora and Tips, Aishwarya Rajinikanth is set  to direct a music video - Social News XYZ

இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கி வருகிறார்.

இதற்காக தமிழில் இந்த பாடலை பாட தனது ஃபேவரைட் நெருங்கிய சொந்தக்காரரான அனிருத்தை பாடுவதற்கு வாய்ப்பளித்துள்ளார். தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா கடும் பிசியாக உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!