“ஐய்யோ.. அது நா இல்ல” – ரசிகரின் கேள்வியால் அதிர்ச்சியான அனிதா சம்பத்..!

மணிமேகலைனு நெனச்சி ஒரு பையன் அப்படி என்கிட்ட பண்ணதும் நான் பயந்துட்டேன் – அனிதா சம்பத் சொன்ன விஷயம்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார்.

அனிதா அளித்த பேட்டி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனிதா சம்பத் மீண்டும் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அனிதா சம்பத் அளித்திருந்த பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியிருந்தது, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்? என்று கேட்டார். அதற்கு, நியூஸ் சேனலில் வேலை செய்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் நீங்கள் தானே நிறைய பாட்டுகளை போடுவீர்கள். உங்களுடைய பெயர் கூட மேகலை தானே என்று சொன்னார்.

மணிமேகலை குறித்து அனிதா சொன்னது:

பின் நான் நியூஸ் வாசிப்பவள். அவர்கள் மணிமேகலை என்று சொன்னேன். இன்னொரு நாள் சன் டிவியில் நியூஸ் வாசிப்பதற்கு ஆடிஷன் சென்று இருந்தேன். அப்போது அந்த ஏரியாவில் யாருமே இல்லை. இரண்டு பசங்க மட்டும் என்னிடம் வந்து உங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பின், டேய் மணிமேகலை வாடா! செல்பி எடுக்கலாம் என்று சொன்னார். அப்ப நான் மணிமேகலை இல்லை என்று சொன்னேன். பலரும் ஆரம்பத்தில் என்னை மணிமேகலையாகவே நினைத்து பேசினார்கள் என்று கூறி இருந்தார்.

மணிமேகலை குறித்த தகவல்:

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

மணிமேகலை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி:

மணிமேகலை திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்றே சொல்லலாம். தற்போது இவர் பட நிகழ்ச்சிகளின் ப்ரோமோசன்களையும், டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

Poorni

Recent Posts

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

7 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

1 hour ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

This website uses cookies.