அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை.. சிக்கியது யார்? உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுவது என்ன?

Author: Hariharasudhan
25 December 2024, 12:21 pm

சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் நேற்று (டிச.24) பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, அங்கு வந்த 2 பேர், திடீரென மாணவரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். ஆனா;ல், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எந்தப் புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதன் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி ஆட்களா என்பதை அறிய, பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், மாணவியின் புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Govi Cheziyaan about Anna University sexual assault

இதனிடையே, இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது வன்கொடுமை சம்பவம் நடந்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!

இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது” எனத் தெரிவித்து உள்ளார். ஒரு உயரிய பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply