யார் அந்த SIR? மாணவியின் பகீர் வாக்குமூலம்.. அதிரவைக்கும் FIR!

Author: Hariharasudhan
26 December 2024, 11:18 am

அண்ணா பல்கலை மாணவி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாவதாக சார் என ஞானசேகரன் கூறியது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை: டிசம்பர் 23, இரவு 07.45 மணி அளவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒரு கட்டடம் அருகே நானும், எனது ஆண் நண்பரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென எங்கள் கண்முன்னே வந்தார்.

’நீங்கள் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை நான் வீடியோவாக எடுத்துவிட்டேன். உங்களது டீனுக்கு அனுப்பவா?’ எனக் கேட்டுக் கொண்டே எனது செல்போனை வாங்கி, என்னுடைய அப்பாவின் செல்போன் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.

நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. பின்னர், எனது ஆண் நண்பரை அழைத்துச் சென்று, மிரட்டி அவரை அனுப்பிவிட்டார். பின்னர், என்னை அடுத்த இரண்டு கட்டடங்களுக்குப் பின்னால், இருள் சூழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்நபர், எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்குவதாக கூறினார்.

முதலில், இதனை கல்லூரி டீனுக்கு அனுப்பி விடுவேன், இரண்டாவது, நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், மூன்றாவது, அந்த சார் சொல்வதை நீ கேட்க வேண்டும் எனக் கூறினார். இதில் சார் என யாரைச் சொன்னார் என எனக்கு தெரியவில்லை. பின்னர், நான் மீண்டும் கெஞ்சினேன்.

Anna University Sexual assault FIR

இருப்பினும், அவர் எதையும் கேட்கவில்லை. பின்பு சுமார் 8.30 மணி வரை என்னை பாலியல் வன்கொடுமை துன்புறுத்தல் செய்தார். இதனிடையே, அவருக்கு ஒரு நபர் கால் செய்தார். அவரிடம், இப்போது பெண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

இதுதான், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரனால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலமாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டவை. இதன் அடிப்படையில் பார்த்தால், சம்பவ இடத்தில் ஞானசேகரன் மட்டுமே இருந்தாலும், செல்போனில் ஞானசேகரனை இயக்கியது யார், மூன்றாவது வாய்ப்பில் கூறிய அந்த சார் யார்? என்பது நம் முன்னே நிற்கும் கேள்விகள்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பாக்கிய நிலையில், இந்த வழக்கில் கைதாகி உள்ள ஞானசேகரன், திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சாம்பியன் குகேஷ்.. வீட்டுக்கே அழைத்து சர்ப்ரைஸ்..!!!

மேலும், இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசேகரன்.

அப்போது, ஜனவரி 8 வரை நீதிமன்றக் காவல் அளித்த நிலையில், ஞானசேகரன் மாவுக்கட்டுடன் இருப்பதால், சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 81

    0

    0

    Leave a Reply