தமிழகம்

’இரண்டாவது டார்கெட் கமிஷனர் ஆபீஸ்’.. 8 பேரின் கூட்டுச் சதி.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

2022 கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததற்கு 10 மாதங்களுக்கு முன்பு காட்டில் வைத்து 8 பேர் சதித்திட்டம் தீட்டியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையில், கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், முதல் குற்றவாளியாக தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவரான எஸ்ஏ பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி உயிரிழந்தார்.

பின்னர், எஸ்ஏ பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்த தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நேற்று மாலை, கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய அண்ணாமலை, “2022ஆம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறி கோவையைத் தாக்க திட்டமிட்டனர். மக்கள் அதிகம் கூடும் ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தி சேதம் ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். கோயிலைத் தாண்டும்போது வெடித்து முபின் இறந்துவிட்டார்.

ஆனால், இதற்காக, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உமர் பரூக் என்பவர் தலைமையில், சத்தியமங்கலம் காட்டில் சதித் திட்டத்தை தீட்டினர். அதன்படி, அவர்களின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் ஆபீஸ். 7 நாள் 7 இடங்களை தாக்குவதற்கு அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால், இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தமிழக போலீஸ் கூறுகிறது. நானும் அதே காக்கியைப் போட்டவன், எனவே காவல்துறை இனியாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 1998 கோவை குண்டு வெடிப்புக்காக பாஷா மைசூர் சென்று வெடிகுண்டு வாங்கினார்.

50 பேர் இறந்து, 250க்கும் மேற்பட்டோர் இதில் காயம் அடைந்தனர். ஆனால், அந்த பாஷாவை ‘அப்பா’ என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா? ஓட்டுப் பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

திருமாவளவன் பாஷாவை, ‘தியாகி, வீரவணக்கம்’ என்ற வார்த்தைகளால் சொல்கிறார். இதைவிட மோசமாக ஓட்டு பிச்சையை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில், ‘மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன்’ எனக் கூறியதை மறக்கக் கூடாது.

இதையும் படிங்க: தீர்த்தம் குடித்த சாமியார் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திகிலூட்டும் பின்னணி!

கோவைக்கு என்ஐஏ அலுவலகம் அமைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனையில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது ஒடுக்குமுறை செலுத்துகின்றனர்” எனக் கூறினார். குண்டுவெடிப்பு தொடர்பாக அண்ணாமலை பேசிய இப்பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள், இரவு 11 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

Hariharasudhan R

Recent Posts

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…

58 minutes ago

உடம்பில் ஆடையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்! எம்ஜிஆர்தான் காரணமா?

எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…

2 hours ago

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…

2 hours ago

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ பதிவு : அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…

3 hours ago

இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!

இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…

4 hours ago

This website uses cookies.