இப்போதான் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காரு.. அண்ணாமலை சூசகம்!

Author: Hariharasudhan
14 March 2025, 9:36 am

டாஸ்மாக் ஊழலை மறைப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, தொகுதி மறுசீரமைப்பு, ரூபாய் இலச்சினை மாற்றுவது என கண்ணாமூச்சி ஆடிவருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நாங்கள் சில நாட்களாகவே யூகித்தோம். நாங்கள் யூகித்ததுதான் தற்போது அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ளது. ரூ.1,000 கோடிக்கும் மேலாக கமிஷன் பெறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர், டெல்லியில் நடந்த மதுபான ஊழல்களை விட பெரிதாக சென்னை மதுபான ஊழல் இருக்கும் என்ற எண்ணம் உள்ளது. இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, தொகுதி மறுசீரமைப்பு, ரூபாய் இலச்சினை மாற்றுவது என புதிது புதிதாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவருகிறது.

டாஸ்மாக் துறையின் அமைச்சர் தற்போதுதான் சிறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்துள்ளார். வந்தபிறகு மீண்டும் இப்படி நடக்கிறது. இதில் முதலமைச்சர், தமிழ்நாடு மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார். மேலும், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நேற்று அமலாக்கத்துறையின் அறிக்கை திமுக அரசுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

Senthil Balaji

நேற்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், “அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, பணியிடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான தரவுகள் கிடைத்துள்ளன.

இப்போதான் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காரு.. அண்ணாமலை சூசகம்!இதையும் படிங்க: என்னங்க இதுல எல்லாமே கிடைக்குது.. Grok AI என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?

SNJ, Kals, Accord, SAIFL, சிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான நிறுவனங்கள், தேவி பாட்டில்கள், கிரிஸ்டல் பாட்டில்கள் மற்றும் GLR ஹோல்டிங் போன்றவற்றுடன் பெரிய அளவிலான நிதி மோசடிகள், கணக்கில் காட்டப்படாத பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சோதனையில் தெரிய வந்தது.

மேலும், கணக்கில் காட்டப்படாத ரூ. 1,000 கோடியை மறைப்பதற்காக, மதுபான ஆலைகள் திட்டமிட்ட முறையில் செலவுகளை உயர்த்தி, போலியான கொள்முதல்களை, குறிப்பாக, பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் போலியான கொள்முதல் கணக்கு வழக்குகளைச் செய்திருக்கின்றன என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?