அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்னிறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை அறிவித்தார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
இன்றைய தினம், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு உட்பட்ட திருவாச்சி நீரேற்று நிலையத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டப் போராட்டக்குழுவினரையும் இந்த திட்டத்தால் பயன்பெறக்கூடிய விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தபின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தேன்.
திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதமாக்கி வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து, அமைச்சர்கள், ஆளுக்கொரு பணி நிறைவு சதவீதத்தைக் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்காகக் குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதியையும் இதுவரையிலும் வழங்கவில்லை.
உண்மையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த 39 மாதங்களில், இது வரை பலமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி திசைதிருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, எதனால் இன்று வரை இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க, திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும். பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல தமிழக அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. தமிழக அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் பணி. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை திமுக அரசு, இந்தக் குழுவை அமைக்கவில்லை.
உடனடியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குழாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவற்றை நிறைவேற்ற திமுக அரசு தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக BJP சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை அதில் பேசியிருந்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.