அரிசி மூட்டையை சுமந்து சென்ற அண்ணாமலை : வைரலாகும் வீடியோ…நெட்டிசன்கள் கேள்வி.. பாஜக பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 12:00 pm

அரிசி மூட்டையை சுமந்து சென்ற அண்ணாமலை : வைரலாகும் வீடியோ…நெட்டிசன்கள் கேள்வி.. பாஜக பதிலடி!!

அண்ணாமலையின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, பாஜக சார்பில் அலுவலகம் ஒன்றில் நிவாரண பொருட்கள் குவிக்க வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக, மூட்டை மூட்டையாக அத்தியாவசிய இங்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.. நேரடியாக இதை பார்வையிட்ட அண்ணாமலை, அங்குள்ள பொருட்களையும் ஒழுங்குப்படுத்தினார்.

அப்போது, ஒரு அரிசி மூட்டையை அசால்ட்டாக தூக்கி தன்னுடைய தோளில் வைத்து கொண்டார்.. அந்த அலுவலகத்தில் இன்னொரு பகுதியில் அந்த அரிசி மூட்டையை கொண்டு போய் வைத்தார்.. அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் இதை பார்த்து மிரண்டுபோய்விட்டார்கள்.

போலீஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை.. அதனால், எப்போதுமே உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவார்.. ஒருமுறை இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது..

வேர்க்க விறுக்க அந்த வீடியோவில், பயிற்சிகளை செய்து கொண்டே, எல்லாருமே காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. உடற்பயிற்சிக்காக, 2 மணி நேரம் நம்ம கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டால், அன்றைய நாள்முழுவதும் மிச்ச 8 மணி நேரமும் நம்முடைய கன்ட்ரோலில் அந்த நாள் இருக்கும்.. என்று அறிவுறுத்தியிருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதாலோ என்னவோ, அசால்ட்டாகவே இந்த அரிசி மூட்டையை தூக்கி முதுகில் வைத்துக் கொண்டார் அண்ணாமலை.. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. எப்படியும் அந்த அரிசி மூட்டை 10 கிலோ இருக்கும் என்கிறார்கள்.. நோ சான்ஸ், 5 கிலோ மூட்டையாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

ஒத்த கையாலேயே, சாதாரணமாகவே மூட்டையை தூக்கறாரே தலைவர்” என்று பலரும் வீடியோவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். புரட்சி தளபதி, உழைப்பாளிகளின் அண்ணன் என்று பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள்..

ஆகமொத்தம், அண்ணாமலை எந்த காரியத்தை செய்தாலும், அது வைரலாகிவிடுவதுபோல, இந்த அரிசி மூட்டையும் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது..

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ