சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே.. திமுகவை அல்வா கடையுடன் ஒப்பிட்ட அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 6:17 pm
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்க : ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து வெட்டு.. துடிதுடித்த மனைவி!
நெல்லையில் ₹1679 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது. இந்திய வரைப்படத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா? மத்திய பட்ஜெட்டில் இருக்க வேண்டாமா? திருநெல்வேலி அல்வா தான் ஃபேமஸ். ஆனா இப்போ மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ஃபேமஸ் என கூறினார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது டுவிட்டர் பக்கத்தில், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா? எனவும், முக ஸ்டாலின் அல்வா கடை என போட்டோவை பகிர்ந்து விமர்சித்துள்ளார்.