பாஜக நிர்வாகியை படுகொலை செய்த திமுக ரவுடிகள்.. ஆதாரத்துடன் அண்ணாமலை புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 5:10 pm

பாஜக நிர்வாகி விட்டல் குமார் படுகொலையில் சம்மந்தப்பட்ட திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில்,
வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி திரு V. விட்டல் குமார், கடந்த 16.12.2024 அன்று, திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த திரு. விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான N.பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து, திரு. விட்டல்குமார் படுகொலையில், திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. திமுகவோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, திரு. விட்டல் குமார் அவர்கள் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் திமுகவே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Soori speech Viduthalai 2 அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
  • Views: - 50

    0

    0

    Leave a Reply