வெட்கமாக இல்லையா? வீட்டுக் காவலில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள்.. அண்ணாமலை கடும் தாக்கு!
Author: Hariharasudhan3 January 2025, 11:19 am
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலில் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட முயன்ற பாஜக மாநில மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவில் வைக்கப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், ” அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, பாஜக மாநில மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.
இந்த திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
இதையும் படிங்க: 12 வருடம் காத்திருப்பு… ரிலீசாகும் மதகஜ ராஜா… ஆனந்த கண்ணீரில் பிரபலம்!
திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?” எனத் தெரிவித்து உள்ளார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அவர்களை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.