தமிழகம்

பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நுண்ணறிவுப் பிரிவின் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பாளராக 25 வயது பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு 11.30 மணியளவில், பணி முடிந்து வீடு திரும்புவதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார்.

தொடர்ந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அவர் இறங்கியுள்ளார். இதனையடுத்து, நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை திடீரென ஒரு நபர் கீழே தள்ளி விட்டு, அவர் அணிந்திருந்த ஒன்றை சவரன் தங்கச் செயினை பறித்துள்ளார். மேலும், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அப்போது பெண் காவலர் கத்தி கூச்சலிட்டதால், ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் ஓடிவந்து போதை நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சத்யபாலு (40) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபரைக் கைது செய்த மாம்பலம் ரயில்வே போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

இதையும் படிங்க: வேட்டைக்காரன் பாடலை வைத்து விஜயை மடக்கிய எச்.ராஜா.. மகனையும் விட்டுவைக்கவில்லை!

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Hariharasudhan R

Recent Posts

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

41 minutes ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

1 hour ago

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…

2 hours ago

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

15 hours ago

ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…

16 hours ago

சல்மான் கானுடன் லிப் லாக்… தீயாய் பரவிய ராஷ்மிகா வீடியோ.. இறுதியில் டுவிஸ்ட்!

தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…

17 hours ago

This website uses cookies.