அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சை… திமுக மவுனமாக இருக்க காரணமே இதுதான் : சந்தேகம் கிளப்பிய சீமான்!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2023, 2:47 pm
அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சை… திமுக மவுனமாக இருக்க காரணமே இதுதான் : சந்தேகம் கிளப்பிய சீமான்!!
கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா சிக்னல் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடி மரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், சேரன்,சோழர்,பாண்டியர் போல் தலைவர் பிரபாகரன் வீரம் மிக்கவர் அதனால் கொடியில் புலியை பயன்படுத்துவதாக சீமான் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகவும் நான்கு மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்கு பயணத்தை தொடங்கி விட்டதாக கூறினார். நான் ஒரு தமிழ் தேசிய மகன் எனவும் தமிழ் நிலத்துக்காக தான் தேர்தலில் நிற்பேன் நாடாளுமன்ற தேர்தலுக்கு என் தம்பி தங்கைகளை தோல் மீது ஏற்றி அவர்களை வழி அனுப்பினேன் என்று கூறினார்.
தமிழகத்தில் நரேந்திர மோடி,ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து போட்டியிடுவதாகவும் அவர்களை எதிர்க்கும் வகையில் போட்டியிடத் தயார் என்று சீமான் தெரிவித்தார்.
நடிகர் கமலஹாசன் பாஜக அண்ணாமலை தேர்தலில் நிற்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறினார்.இந்திய கூட்டணியில் நான் அதில் இல்லை எனவும் அது ஒரு வேடிக்கையான கூட்டணி எனவும் மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் எதிர்க்கிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது.கேரளாவில் கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் எதிராக இருக்கிறது.பஞ்சாபில் காங்கிரஸ் எதிராக கெஜ்ரிவால் நிற்கிறார்.
ஆனால் இந்தியா கூட்டணி அனைவரும் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருப்பதாக இந்தியா கூட்டணியை விமர்சித்து உள்ளார். அதிமுக கொடியில் அண்ணா உள்ளார்.அப்படி இருக்கும் போது அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்தது தவறு என்றும் அண்ணா இருக்கும்போது தான் இந்த தொன்மையான வரலாறு பற்றி பேசப்பட்டது.கூட்டணியில் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று அதிமுக பேசுவது பாராட்டத்தக்கது என்று சீமான் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்தற்கு திமுக ஆர்.எஸ் பாரதி,முதல்வர் ஸ்டாலின்,உதயநிதி கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர் என தெரிவித்தார்.