’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!
Author: Hariharasudhan20 February 2025, 8:57 am
திமுககாரன் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், நடுத்தர மக்கள் இரு மொழிகளைத்தான் படிக்கணுமாம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
கரூர்: கரூரில், 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, “அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு இம்முறை மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தீய சக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளனர்.
திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால், ஒரு பானை பனைமரத்துக் கள்ளைக் குடித்த குரங்கு தட்டு தடுமாறிக்கிட்டு இருக்கிறது. அப்போது, ஒரு தேள் வந்து கடிக்கிறது. கள்ளைக் குடித்த குரங்கை தேள் கடித்தால், அந்தக் குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ, அப்படித்தான் திமுக ஆட்சி நிலைதடுமாறி இருக்கிறது.
திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகிய தற்குறிகளைப் போன்று, அவர்கள் பாணியில் பேசப் போகிறேன். நீ (உதயநிதி) சூரியனை 11.30 மணிக்கு நடு உச்சியில் பார்க்கிறவன். நாங்கள், அதிகாலை 3 மணிக்கு பிரம்ம காலத்தில் எழுந்து குளித்து, 5 மணிக்கு கோப்புகளை எடுத்து, பார்க்கக் கூடியவர்கள்.

Get Out Modi, அதாவது வெளிய போடா மோடி என உதயநிதி ஸ்டாலின் கூறுவாராம். எங்கே, தைரியமான ஆளாக இருந்தால் சொல்லு பார்ப்போம். ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார். இதுவரையில் எந்த மேடையிலும் நான் அப்படி பேசியதில்லை.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!
2026ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியேச் செல்ல வேண்டியதுதான். மோடி இந்தியை எங்கே திணிக்கிறார்? யாராவது சொல்லுங்கள். தமிழகத்திற்கு அவர் வந்தாலே, ஆங்கிலத்தில்தான் பேசுகிறார். உங்களுடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் எனில், மூன்று மொழிகளைப் படிக்க வையுங்கள் என்பதைத் தான் சொல்கிறார்.
ஆனால், பொய்யைச் சொல்லி INDIA கூட்டணி என்ற போர்வையில் உலக மகா அயோக்கியன் எல்லாம் ஒரே மேடையில் உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் பிரெஞ்ச் மொழி படிக்கிறார். திமுககாரன் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், நடுத்தர மக்கள் இரு மொழிகளைத்தான் படிக்கணுமாம். நடிகர் விஜய் சொந்தமாக நடத்தி வரும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில் இந்தி இருக்கிறது” எனக் கூறினார்.