உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குங்க.. பாய்ந்து வந்த அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2025, 7:59 pm

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வகையில், இந்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்னானது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது எனக் குறிப்பிட்ட உத்தரவு இல்லை. இதுதொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்கிறோம். இதற்கு அவகாசம் வழங்குங்கள்” என செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், “அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராகத் தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்கக் கூறி இருந்தோம்? ஆனால், அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது டாஸ்மாக் முறைகேடு அறிக்கையும் உள்ளதால், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது X தள்ளப்பக்கத்தில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

Annamalai demands removal of Senthil Balaji from ministerial post

முதலமைச்சர் திரு. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுளள்ர்.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply