வேட்பாளரின் Mobile நம்பரை வாக்காளர்களுக்கு கொடுத்த அண்ணாமலை.. பரப்புரையில் சுவாரஸ்யம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 9:44 pm

வேட்பாளரின் Mobile நம்பரை வாக்காளர்களுக்கு கொடுத்த அண்ணாமலை.. பரப்புரையில் சுவாரஸ்யம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மூடப்படும். கரூரில் தொழில் வளர்ச்சி உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். மத்திய அரசு நடத்தக்கூடிய, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில், இரண்டு நவோதயா பள்ளி கரூர் பாராளுமன்ற தொகுதியில் அமைக்கப்படும்.

வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்று வந்தால் ஒவ்வொரு பஞ்சாயத்தின் தாய் கிராமத்திற்கும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரப்படும்.

தென்னம்பட்டி பிரிவு அருகே நான்கு வழி சாலையில் மேம்பாலம் கட்டுவது, வடமதுரை காணப்பாடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது, பாளையம் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

அப்போது செந்தில்நாதன் எந்த நேரமும் பொதுமக்கள் தன்னை தொடர்பு கொள்ளும் வகையில் அவரது தொலைபேசி எண்ணை பிரச்சார வேனில் இருந்தபடி அறிவிப்பு செய்து தொலைபேசி எண் அச்சிடப்பட்ட அட்டையை காண்பித்தார்.

கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்று வந்தால் எந்த நேரத்திலும் அவரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணாமலை பேசினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!