வரலாற்று பிழை செய்துள்ளார் அண்ணாமலை.. அவரு வந்த வழி அப்படி : செல்வப்பெருந்தகை விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 1:12 pm

திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.

மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, உதய் மின் திட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையொப்பமிடவில்லை., அவர் காலமான பிறகு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டதால் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம் சென்று விட்டனர். இதனால் கடன் வாங்க முடியாது., தற்போது ஒன்றிய அரசின் உத்தரவு மற்றும் அழுத்தத்தின் பெயரில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் காங்கிரஸ் சார்பாக முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகி கொலையகல் குற்றவாளி கைது செய்யப்படவில்லை குறித்த கேள்விக்கு.

தமிழ்நாடு காவல்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை கண்டுபிடித்தவர்கள். அதே நேரத்தில் புலன் விசாரணையில் நாம் தலையிடக்கூடாது என்ன நடக்கிறது என்பதை எங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார்கள் கூடிய விரைவில் உண்மை வெளிவரும்..

தமிழக பாதுகாப்பு குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு, முதலில் ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்து குஜராத்தில் இருந்து போதைப்பொருள் வருவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டிற்கு குஜராத்தில் இருந்து தான் போதை பொருள் வருகிறது. போதைப் பொருளை தடுத்தாலே எல்லா குற்றங்களும் குறைந்துவிடும்..

கான்ல, முத்ரா என்ற அதானி துறைமுகங்களில் இருந்து சென்னைக்குள் தமிழ்நாட்டிற்கு வருவதாக செய்தி., முதலமைச்சர் பல இடங்களில் இதை குறிப்பிட்டுள்ளார் இதை கட்டுப்படுத்த வேண்டும்.

சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, அது அவர்களுக்கு கட்சி பிரச்சன அவர்கள் ஒன்றிணைவதும், ஒன்று இணையாமல் இருப்பதும் அதில் நமது கருத்து சொல்வதற்கு முடியாது.

தலித் மக்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தியாவில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது தலித்துகள் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். ஆயுதங்களால் மட்டுமல்ல சொற்களாலும் தாக்கப்படுகிறார்கள் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் இது.

ஓய்வு பெற்ற நீதி அரசரை கூட இன்று அண்ணாமலை விமர்சித்துள்ளார் இது வரலாற்று பிழை அவர்கள் வந்த வழி எப்படியோ அப்படிதான் பேசுகிறார்கள்.

பாஜக வினர் தோழமைக் கட்சிகளையும் எதிர்கட்சிகளையும் கூட விடுவதில்லை, ஆட்சியாளர்களையும் விடுவதில்லை. இந்த வெறுப்பு அரசியலை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

காவிரி பிரச்சனையில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு. காவிரி பிரச்சனையில் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது இந்த தீர்ப்பின் அடிப்படையில் நமது கிடைக்க வேண்டிய உரிமையை காவிரி தண்ணீரை கொடுக்க வேண்டியது கர்நாடகா அரசு கடமை. அவர்கள் மறுக்கிறார் என்றால் இதனை ஒன்றிய அரசு பெற்றுத் தர வேண்டும் இதில் பிரதமர் தலையிட்டு தான் பெற்று தர வேண்டும் அது மோடியின் கடமை என்றார்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!