திமுக தோல்வி.. அமைச்சர் பதவி விலகுக.. அண்ணாமலை காட்டம்!

Author: Hariharasudhan
19 February 2025, 1:28 pm

பள்ளிகளில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம், அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.

எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Annamalai vs Anbil Mahesh

பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.

உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள்.. ‘யாரோ இருவர்’? சேலம் வழக்கில் திடீர் திருப்பம்!

புதுக்கோட்டை பாலியல் வன்கொடுமை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த பெருமாள் (58), அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், விசாரணைக்குப் பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உதவித் தலைமை ஆசிரியருக்கு, புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
  • Leave a Reply