அண்ணாமலை ஒரு பொய்ப்புழுகி… தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டு விலகுவேன் : காங்., எம்.பி., பகிரங்க அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 7:02 pm

அண்ணாமலை ஒரு பொய்ப்புழுகி… தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டு விலகுவேன் : காங்., எம்.பி., பகிரங்க அறிவிப்பு!

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடந்து செய்தியாளர் களிடம் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாஜக, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது.

அந்த மாநிலங்களில் எல்லாம் மது ஒழிக்கப்பட்டு விட்டதா? அண்ணாமலையை பொருத்த வரையில் தொடர்ந்து புரளிகளை மட்டுமே சொல்லி வரும் அண்ணாமலை எப்போதுதான் உண்மையை பேச போகிறார்?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்கிறேன். அதேபோல் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றாவிட்டால் மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியலை விட்டு செல்வாரா ?

மத்தியில் இந்தியா கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட்டை பற்றிய அறிக்கை தெளிவாக இருக்கும் என்றார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!