கரூரில் விரட்டப்பட்டு கோவையில் சிக்கியுள்ளார் அண்ணாமலை.. பொய் செய்தி பரப்ப பாஜக தனிக்குழு வைத்துள்ளது : கனிமொழி விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 12:35 pm
கரூரில் விரட்டப்பட்டு கோவையில் சிக்கியுள்ளார் அண்ணாமலை.. பொய் செய்தி பரப்ப பாஜக தனிக்குழு வைத்துள்ளது : கனிமொழி விமர்சனம்!
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார் என்றார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும் எனவும்., தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றார்.
சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும், இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார் எனவும் கணக்கு தப்பாக போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்றார்.
இப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை எதிர்த்து நாம் போட்டியிடுகிறோம்.
அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். திமுக வெற்றி அசைக்க முடியாத உண்மை எனத் தெரிவித்தார்.
தவறான விஷயங்களை பொய்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கலாம். மருதமலையில் கரண்ட் தரவில்லை என்று சொன்னார் முன்னதாகவே திமுக கரண்ட் தந்து விட்டது என்றார்.ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படித்தாலே இத்தனை புத்தகம் படிக்க முடியும் கோட்டாவில் நல்ல புத்திசாலி அறிவாளியானவர்கள் படித்திருக்கின்றார்கள்.
தலைவர் கலைஞர் தந்த கோட்டோவில் தான் நீங்கள் படித்து இருக்கின்றீர்கள் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் (பாஜக தலைவர் அண்ணாமலைக்கு) பொய் செய்திகளை வெளியிடவே பாஜகவில் தனி அமைப்பு வைத்திருக்கின்றனர் எனவும் கூறினார்.
கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்ட பின்னரும் அதற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படத்தை வெளியிட்டு மருத்துவமனை கட்டவில்லை என பொய் பிரச்சாரம் செய்தனர், இப்படி ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்றார்.
தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
நம் பிள்ளைகள் வசதியாக மரியாதையாக நல்ல வேலை கிடைத்து அடுப்படி வசதியுடன் வாழ வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு எனக்கூறிய அவர் மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் போதும் என்பதாக இருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது . பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் இவர்களில் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன? மணிப்பூரில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள் பிரதமர் இது குறித்து கேட்டிருக்கின்றாரா ?
44 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்து வருகின்றன பெண்கள் மீதான குழந்தைகள் மீதான கொடுமை இரண்டு மடங்காக மாறி இருக்கின்றன.
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நடந்த தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என போராடினர் என்றார்.என்ன தவறு செய்தாலும் எல்லாத்தையும் அவர்கள் பாதுகாப்பார்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் பாஜகவினர் மிரட்டுவார்கள்.
சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள் பிஜேபிக்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமன் அனுப்பினர். பாஜகவில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் சேர்ந்தால் அவர்களின் குற்றம் போகின்றது என்றார்.
தேர்தல் பத்திரத்தை கண்டுபிடித்து அதனை சட்டம் பூர்வமாக்கி, முக்கால்வாசி தேர்தல் பத்திரம் பாஜகவினருக்கு தந்திருக்கின்றனர் எனவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் ரைடு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர் எனவும், கோடக் மகேந்திரா நிறுவனத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே 10 கோடிக்கு தேர்தல் பத்திரம் பாஜகவினருக்காக வாங்குகின்றனர் என்றார்.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரிசர்வ் வங்கி பாஜகவினர் கேட்டதற்கு ஒப்புக்கொள்கின்றன. தேர்தல் பத்திரம் ஒரு சட்டபூர்வமான ஊழல். இதில் பாஜகவினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர்.
டெல்லி முதல் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்திருக்கின்றனர். குற்றத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு அதிக தேர்தல் பத்திரம் தந்திருக்கின்றார். எதிர்த்துப் பேசியதால் அரவிந்த் எஜமான் மனோசிசோபியா முன்னிட்டு அவர்களை சிறையில் வைத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை முடிந்துவிடும்.
கடைசி தேர்தல் அப்படி ஒரு விபத்து நடந்தால் இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தலே நடக்காது யாரும் ஒற்றை கேட்க மாட்டார்கள் என்ன சட்டம் வேண்டுமானால் கொண்டு வருவார்கள் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் இவர்கள் அமல்படுத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.
பாஜகவின் இது போன்ற கொடிய திட்டங்களுக்கு துணை நின்றவர்கள் அதிமுகவினர். இன்று அவர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கின்றார் அதனை நம்ப வேண்டாம் மக்களுக்கு நடந்த கொடுமை அனைத்துக்கும் அதிமுகவிற்கு பங்கு உண்டு இரண்டு ஸ்டிக்கரும் சேர்ந்து மீண்டும் ஒட்டிக் கொள்ளும் திமுக தலைவர் உட்பட அனைவரும் பாஜகவை கேள்வி கேட்கின்றனர் விமர்சிக்கின்றனர் திமுக அதிமுக இடையே போட்டி பிஜேபி பாவம் நானும் இருக்கே நானும் இருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கிறனர்.
இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறையாவது பிரதமரை எதிர்த்து பேசியிருக்கின்றாரா என கேள்வி எழுப்பினார். திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை பிரதமர் முன்பாக கை கட்டி நிற்க வேண்டும் என்பதனால் இதுவரை பேசவில்லை இப்படி இருவரும் ஓட்டு கேட்டு வருவார்கள் அவர்களை திருப்பி அனுப்பி கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.
சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் 50,000 தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வந்த பிறகு மூடப்பட்டிருக்கின்றன என்றார்.2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார் வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று சொல்கின்றார்.
ஜிஎஸ்டி பார்மை சரியாக பில்லப் செய்யவில்லை என்று கூட அதற்கு அபராதம் வைத்து சித்ரவதை செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. ஜி எஸ் டி குறித்த கோதிக்கு அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.
ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு காணுமிடம் என மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார் நிச்சயமாக அது சரி செய்யப்படும் அடிப்படை ஆதாரங்களை வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர் அதனை தரக்கூடாது எனவும் கடனை ரத்து செய்யக் கூடாது எனவும் பாஜகவினர் இருக்கின்றனர். ஆனால் பெருமுகராணிகளின் கடமைகளை ரத்து செய்கின்றனர்.
68,700 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடல் ரத்து செய்து இருக்கின்றார்கள் விமான நிலைய விரிவாக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதனை செய்ய மறுக்கின்றார்கள் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு பத்து நாட்களில் ஏர்போர்ட்டை தருகின்றார்கள்.
அம்பானியும் அதன் ஆட்சி இது சாமானியர்களுக்கான ஆட்சி இல்லை மோடி ஆட்சிக்கு வந்த போது ஒரு சிலிண்டர் விலை 410 ரூபாய். இப்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை விற்கின்றார்கள். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைக்கும் பொழுது சிலிண்டர் விலை குறைக்கப்படும் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என கூட்டணியின் தலைவர் ஆன அண்ணன் தளபதி அறிவித்திருக்கின்றார்.
பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் 10 அடிக்கு ஒரு தடவை டோல்கேட். டோல்கேட் அனைத்தையும் இழுத்து மூடி அதற்கு ஒரு மூடு விழா நடத்துவோம் என்று நாம் அறிவித்திருக்கின்றோம் நிச்சயமாக அதனை செய்து காட்டுவோம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி 10 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத்துவப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலானோர் இந்து பெண்களே நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கக்கூடிய அந்த திட்டத்தில் பயன்படக்கூடியவர்கள் பெரும்பான்மையாக இருப்பவர்கள் இந்துக்கள் படிப்பவர்களுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தை தந்திருக்கின்றோம் கல்லூரி படிக்கும் இளைஞர்களுக்கு தமிழ் முதல்வன் திட்டம் ததரப்பட்டிருக்கின்றது.
ஆனால் பாஜக என்ன செய்திருக்கின்றார்கள் நம்ம வீட்டுப் பெண்கள் படிக்க கூடாது என்பதற்காக கல்வி கொள்கையை கொண்டு வந்து நுழைவுத் தேர்வு வைத்திருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் அடிமையாக வைத்திருந்தது போல மீண்டும் நம்மளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெரும்பான்மை மக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருப்பவர்கள் பாஜகவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் நமக்காகவே ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோர் போராடி வருகின்றார்கள்.
இவர்கள் போராட்டமே பெரும்பான்மையான மக்கள் பிள்ளைகள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக போராடுகின்றனர். 1339 கோவில்களுக்கு திமுக ஆட்சியில் குடமுழுக்கு செய்திருக்கின்றார்கள் என கூறினார்.ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நீதியை கோயில்களுக்கு வைத்து தந்திருக்கின்றார்கள்.
பூஜை செய்யாமல் இருந்த பதிவுல ஆயிரம் கோவில்களுக்கு நிதியை உயர்த்தி வழங்கி இருக்கின்றனர் நூத்தி முப்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கின்றனர் யாருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது இல்லை என்பது முக்கியமல்ல நம்ப கூடியவர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பதே முக்கியம்.
நம் நிதியை அனைத்தும் ஒன்றிய அரசாங்கம் பிடுங்கி கொண்டு செல்கின்றனர் ஒரு ரூபாய் தந்தால் 28 பைசா தருகின்றார்கள் மற்ற மாணவிகளை உருவாக்கி தந்தால் இரண்டு ரூபாய் தருகின்றார்கள் இத்தனை நெருக்கடியிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர் என தெரிவித்தார்.