கர்நாடகாவுக்கே திரும்பி ஓடப் போகிறார் அண்ணாமலை : அண்ணா, பெரியார் போட்ட பிச்சையால்தான் அவர் ஐபிஎஸ்.. ஆர்எஸ் பாரதி தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 5:15 pm

கர்நாடகாவுக்கே திரும்பி ஓடப் போகிறார் அண்ணாமலை : அண்ணா, பெரியார் போட்ட பிச்சையால்தான் அவர் ஐபிஎஸ்.. ஆர்எஸ் பாரதி தாக்கு!!

செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு அரசியலே தெரியவில்லை. ஒரு பழமொழி கிராமத்தில் சொல்வார்கள். ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.’ என்று. அதுபோல அண்ணாவுடைய பெருமை அண்ணாமலைக்கு தெரிவதற்கு நியாயமில்லை. அவர் கொஞ்சம் மரியாதையாக பேசுவது இனி நல்லது.
காரணம் திமுகவும் தமிழ்நாடு மக்களும் அண்ணாவை பற்றியும் பெரியாரை பற்றியும் எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ, அனுமதிக்கவோ தயாராக இல்லை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பேசி இருக்கும்போதுகூட அண்ணாதுரை என்று அவர் சொல்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்றுதான் அவரை எல்லோரும் அழைக்கிறார்கள்.
அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த இந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார். அழிவு ரொம்ப நாளில் இல்லை. நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

அண்ணாவை பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு.. தவறான புள்ளி விபரங்களை எல்லாம் அண்ணா பற்றி சொல்கிறார். 1956 ல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணாமலைக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.

1949 லேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தனிப் பெரும் தலைவராக தமிழ்நாட்டில் பவனி வந்தவர். 1949 லேயே கட்சி தொடங்கியவர். அவரை பார்த்து இப்படி கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது அண்ணா போட்ட பிச்சை. பெரியார் போட்ட பிச்சை என்பதை நான் இன்னும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக இருந்திருக்கும். அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலையி பாட்டனார் இருந்திருந்தால் அண்ணா உடைய பெருமையை சொல்வார். அவர் இப்படி பேசுவதை நிறுத்துக்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு மக்கள் எழுந்தால், அவர் எங்கு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரோ அந்த கர்நாடகாவுக்கு மிக விரைவிலேயே ஓடிப்போகிற நிலைமை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!