தமிழகத்தில் மலரும் தாமரை.. சொல்லி அடிக்கும் அண்ணாமலை : வெளியானது EXIT POLL RESULT!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 7:37 pm

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுக்க 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும்.

தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக இன்று மாலை பல்வேறு நிறுவனங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இப்போது வெளியிட்டு வருகிறது.

அதன்படி சிஎன்என் நியூஸ் 18 தமிழ்நாட்டில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த சர்வேயை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 1-3 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் தொழிலதிபர் வீட்டில் நடந்த ஐ.டி ரெய்டு.. கணக்கில் காட்டாத பணம் : ஏர்கன் பறிமுதல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 1 முதல் 3 இடங்களை பிடிக்கும் என சர்வே வெளியாகியுள்ளதால் பாஜகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 3 சீட்டுகளை பாஜக பெறும் என்றால் நிச்சய்ம அதில் அண்ணாமலை இருப்பார் என பாஜகவினர் இப்பவே ஆர்பரித்து வருகின்றனர். எப்படியோ தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதியாகியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ