பெட்ரோல் குண்டு வீச்சு… பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 8:08 pm

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மோகன் அவர்களின் கடைக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார்.

மேலும் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, அவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி
இல்லத்திற்கும், கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் இல்லத்திற்கும் நேரில் சென்று சகோதர வாஞ்சையுடன் சந்தித்து வந்தேன்.

உணர்வுபூர்வமாக உங்களோடு, நாங்கள் இருக்கிறோம், நம் தேசிய தலைவர் திரு.
ஜேபி நட்டா இருக்கிறார், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா இருக்கிறார், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி இருக்கிறார் என்பதை உணர்த்தி வந்தேன் என பதிவிட்டுள்ளார்.

  • Vaadivaasal Movie Latest News களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!