மற்ற கட்சிக்கு வலை விரித்து கடை போட்டார் வியாபாரி அண்ணாமலை.. கடைசியில் போனியே ஆகல : ஜெயக்குமார் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 5:02 pm

மற்ற கட்சிக்கு வலை விரித்து கடை போட்டார் வியாபாரி அண்ணாமலை.. கடைசியில் போனியே ஆகல : ஜெயக்குமார் விமர்சனம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக MLA க்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சார்ந்த பலர் அதிமுகவில் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை, நேற்று கூட அண்ணாமலை கடை விதித்தார்.

அண்ணாமலை என்ற வியாபாரி கடை விதித்தார். அந்த கடையில் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை, அந்த கடைக்கும் யாரும் வரவில்லை. அது போனியாக ஆகாத கடை, அண்ணாமலை கடை போனி ஆகாத கடை என விமர்சனம் செய்தார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!