தூத்துக்குடி மாணவிக்கு அண்ணாமலை போட்ட போன் கால் : மெய்சிலிர்த்துப் போன குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 11:26 am

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற முத்தம்மாள் காலணியை சார்ந்த முனியராஜு – முத்து செல்வி தம்பதியரின் மகளான கௌஷிகா ஆசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வெனஂறு சாதனை படைத்தார்.

கடந்த ஜூன் 25 முதல் 29ஆம் தேதி ஆசிய அளவிலான 31வது ஏசியன் ஜூனியர் ஒற்றையர் சம்பியன்ஷிப் – 2024 ஸ்குவாஷ் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில்12 ஆசிய நாடுகளுக்கு இடையே 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற Asian Junior Individual Championship போட்டி நடைபெற்றது.

இதில் 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய அணி சார்பில் தூத்துக்குடி அழகர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கௌஷிகா கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பாரட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியின் முத்தம்மாள் காலில் உள்ள அவரது இல்லத்திற்கு பாஜகமாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்போன் மூலம் மாணவியின் சாதனை குறித்து அவரது தந்தை முனியராஜிடம் கேட்டு தெரிந்து கொண்டு மாணவி கௌசிகாவை மென்மேலும் பல்வேறு சாதனைகள் தொடர வாழ்த்தினார்.

மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்
சிவராமன், மாவட்ட செயலாலர் கணல் ஆறுமுகம், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்ம குருமூர்த்தி, விளையாட்டுபிரிவு மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் கணேஷ், ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, இளைஞரணி மாவட்ட துனைதலைவர் சக்திவேல், விளையாட்டுபிரிவு மாவட்ட செயலாலர் சிட்டிசன் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?