விஜயின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியே வந்தது எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, உளவுத்துறைக்கு இதுதான் வேலையா என்றும் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (டிச.19) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு மனிதர் தன்னுடைய பொறுப்புக்கு ஏற்ற வகையில் பேச வேண்டும். உதயநிதியின் நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உதயநிதி இந்தி தெரியாது போடா என்று கூறியவர், அவருக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது? காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அதைத்தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். 35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலினத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை?
அல் உமா என்பது தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கி உள்ளது. கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா? கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தால் கோவை உள்பட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் தடைபட்டது.
குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் பெங்களூரு, புனே போன்று கோவையும் ஐடி ஹப்பாக மாறி இருக்கும். அவரது மத முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், நாட்டையே உலுக்கிய சம்பவத்துக்குக் காரணமான ஒருவருக்கு இறுதி ஊர்வலம் நடக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த வாரம் விஜய் கோவாவில் ஒரு திருமணத்துக்குச் சென்றார். அப்போது அவரின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது? அவர் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம், அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அந்தப் போட்டோவை வெளியிட்டது யார்? இதுதொடர்பாக பாஜக சார்பில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்ப உள்ளோம்.
இதையும் படிங்க: காருக்குள் நடந்த சோதனை.. வசமாக சிக்கிய பெண் : உடனிருந்த வாலிபர்கள் கைது!
வருகிறவர்கள், போகிறவர்களை போட்டோ எடுப்பது தான் மாநில உளவுத்துறையின் வேலையா? போட்டோ எடுத்து அதை திமுக ஐடி விங்குக்கு கொடுக்கும் வேலையைத் தான் செய்கிறார்களா? ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
யார் போட்டோ எடுத்து, யாருக்கு அனுப்பினார்கள் என விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் அரசியலைக் கவனிக்க வேண்டும்” என்றார். முன்னதாக, நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்காக விஜய் கோவா சென்றபோது, விமான நிலையத்தில் வைத்து விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…
குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…
கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…
கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…
ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…
This website uses cookies.