அண்ணாமலைக்கு போன் செய்த அதிமுகவினர்.. பரபரப்பில் அரசியல் களம்!

Author: Hariharasudhan
24 December 2024, 6:41 pm

பிரதமர் நரேந்திர மோடி – எம்.ஜி.ஆர் ஓப்பீடு குறித்தான எனது கருத்து தொடர்பாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி – எம்.ஜி.ஆர் ஓப்பீடு குறித்தான எனது கருத்து தொடர்பாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர்.

வாட்ஸ் ஆப் செயலியில் எனக்குச் செய்தி அனுப்பினர். அவர்கள், இந்த ஒப்பீடு சரியானது என்கின்றனர். எம்.ஜி.ஆர் பாரதத்தின் ரத்னா, அதிமுகவின் ரத்னா கிடையாது. அவர் குறித்துப் பேச இங்கு அனைவருக்கும் உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவுநாளையொட்டி அறிக்கை வெளியிட்டு இருந்த அண்ணாமலை, “எம்.ஜி.ஆரும், பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள்.

Annamalai about MGR ruling

தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். எம்.ஜி.ஆரது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது.. மீண்டும் அதிமுக – பாஜக மோதல்!

இது தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “அனைவரும் சமம் என்றார் எம்ஜிஆர். ஆனால் மதத்தால் பிரிவினை செய்கிறது பாஜக. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறுகண்ணில் சுண்ணாம்பும் என பாஜக உள்ளது. சிறுபான்மையினரை ஒரு மாதிரியும், மற்றவர்களை ஒரு மாதிரியும் பாஜக பார்க்கிறது.

பாஜகவைப் போல் எம்.ஜி.ஆர்., மதரீதியான அரசியல் செய்ததில்லை. எம்.ஜி.ஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது என்பது மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்” எனத் தெரிவித்தார். அதேபோல், எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது, அவரைப் போல யாரும் பிறக்கவும் முடியாது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இன்று கூறினார்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…