குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

Author: Hariharasudhan
26 February 2025, 8:43 am

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவைப் பாதிக்கும் என யார் முதல்வருக்குச் சொன்னது? தொகுதிகள் மறுவரை பற்றி முதல்வருக்கு யார் சொன்னார்கள் எனத் தெரியாது.

அந்த மனிதன் யார் எனக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும். முதல்வர் Fitஆக இருக்கிறாரா என சந்தேகம் எழுகிறது. வருடம் ஒருமுறை Mental Checkup செய்வார்கள், அது வழக்கம். காங்கிரஸ் ஏன் புரளி பரப்ப வேண்டுமென பிரதமர் கூறியுள்ளார்.

முதல்வர் ஏன் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்? மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். திமுகவின் தொண்டர்கள் பள்ளிக்குச் சென்று கொஞ்சமாவது படியுங்கள். இந்தியாவில் எந்த பாதிப்பும் வராது என பிரதமர் கூறியுள்ளார்.

Annamalai says MK STalin

2001ல் மறுசீரமைப்பு செய்திருக்க வேண்டும். முதல்வரிடம் யார் சொன்னார்கள் என்று அவர் சொன்னால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்தில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு.
காங்கிரஸ் மாடல் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டது.

காங்கிரஸ் போன்று முடிவெடுக்க மாட்டோம் என பிரதமர் கூறியுள்ளார். குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல் முதல்வர் நடந்து கொள்கிறார். மும்மொழிப் போருக்கு தயாராகட்டுமே. திமுகவின் மொழிப் போராட்டம் என்னவென்றால், அவர்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி, மற்றவர்களுக்கு இரண்டு மொழி என்பதுதான்.

மூன்று மொழி படித்த சாதனையாளர்கள் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இரு மொழியால்தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்றால், முதல்வரின் கணக்கு வாத்தியார் யார் என பார்க்க வேண்டும். முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும்.

மொழி என்பது ஒரு ஆற்றல், அது சாதனைக்குத் துணைபுரியும். மூன்றாவது மொழியை அப்துல் கலாம் ஐயா வேண்டாம், ஜனாதிபதி ஆக மாட்டேன் எனக் கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை இல்லை. ஓநாயும், ஆடும் சண்டை போட்டுக் கொள்வது போன்று உள்ளது.

இதையும் படிங்க: விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

அரசு ஊழியர்கள் பக்கம்தான் நாங்கள் இருப்போம். ஜாக்டோ ஜியோ பக்கம் இல்லை,
ஜாக்டோ ஜியோ இதற்கு முன்பு திமுகவிற்கு ஆதரவாக இருந்தவர்கள். தேர்தலின்போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இன்று ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் கபட நாடகமாக இருக்கலாம்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தித்தாளில் பெட்டி செய்தியாக வர வேண்டும் என்பதற்கு தான். கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் காமெடிக்காக நடத்தப்படுவது. அதனால் கொடி விற்பனை செய்பவர்களுக்கு கொடி விற்பனையாகிறது. மும்மொழிக் கல்வி என்னுடைய குழந்தைகள் திராவிட மொழி (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும், நான்காவது மொழியாக வட மொழி ஒன்றை (இந்தி, சமஸ்கிருதம்) கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • Actress Shruti Narayanan controversyஅய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!