தமிழகத்திலும் ரூ.1,000 கோடி மதுபான ஊழல்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
13 March 2025, 8:56 am

தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 10 லட்சம் கையெழுத்துகளை நாங்கள் பெற்றுள்ளோம். மே மாதத்துக்குள் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று விடுவோம்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மும்மொழி பயிலும் மாணவர்கள் 15.20 லட்சம் பேர் இருப்பதாக கூறியுள்ளார். இவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில்தான் படித்து வருகின்றனர். மெட்ரிக் பள்ளிகளிலும் மும்மொழியைக் கற்பிக்கின்றனர்.

டெல்லி, சத்தீஷ்கரில் மதுபான ஊழல், அந்த அரசுகளை வெளியேற்றிவிட்டது. தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது. திமுகவுக்கு இந்த மதுபானத்தைக் கொண்டுதான் பணம் கிடைக்கிறது. மதுபானம் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் திமுகவினர் 2024 தேர்தலின்போது செலவு செய்தனர்.

Annamalai

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மதுபானம் மூலம் கிடைக்கும் பணத்தையே பயன்படுத்துவார்கள். மும்மொழிக் கொள்கை அவசியமா, மும்மொழிக் படிப்பவர்கள் மட்டும் தான் அறிவு உள்ளவர்களா என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

அவரது மகன் இந்தியக் குடிமகனா, அமெரிக்க குடிமகனா? அவரது மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறான்? மூன்று மொழி சொல்லி கொடுக்கக்கூடிய பள்ளியில் படிக்கிறான் என்றால், உங்களுக்கு அறிவில்லை என்றுதானே அர்த்தம்? அமைச்சர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் மும்மொழியில்தான் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Reason Behind Dhanush Aishwarya Divorce உண்மையை சொன்னா நாறிடும்.. எச்சரித்த ஐஸ்வர்யா : பதிலடி கொடுத்த தனுஷ்..!!
  • Leave a Reply