சொன்னதைச் செய்த அண்ணாமலை.. 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம்!

Author: Hariharasudhan
27 December 2024, 11:06 am

திமுக அரசைக் கண்டித்து, தன்னைத்தானே 8 முறை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டார்.

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேல் சட்ட இல்லாமல், பச்சை நிற வேஷ்டி உடன் வந்து, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். முன்னதாக, 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல், 9ஆம் முறை சாட்டையால் அடித்துக் கொள்ள முற்பட்டபோது தொண்டர்கள், அவரைச் சூழ்ந்தனர். இந்த நிகழ்வு நடைபெறும்போது, ‘வெற்றிவேல், வீரவேல்’ என தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “எங்களை நாங்களே வருத்திக் கொண்டு போராட இருக்கிறோம். எனக்கு நானே சாட்டையடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப் போகிறேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்துக் கொள்ள போகிறேன்.

Annamalai self beating against DMK Govt

தொண்டர்களும் இதனைச் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவர்கள், அவரவர் வீட்டு வாசலில் நின்றாலே போதும். ஏனென்றால், மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியே வர வேண்டும். ஊடகங்களின் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும்” எனக் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: மன்மோகன் சிங் மறைவு; பல்வேறு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் ரத்து! கருப்பு பேட்ச் உடன் இந்திய அணி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பிரியாணி கடை நடத்தி வரும் ஒருவர் கைதான நிலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வெளியான நிலையில், அண்ணாமலை உள்பட சில சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, யாரும் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியாதவாறு முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 53

    0

    0

    Leave a Reply