நாக்குல நரம்பு இல்லைனா என்ன வேணா பேசுவதா? இபிஎஸ் குறித்த பேச்சை அண்ணாமலை வாபஸ் வாங்கணும் : ஆர்பி உதயகுமார்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 2:33 pm

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது

நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கழகமருத்துரணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், அட்சய பாத்திர நிறுவன நெல்லை பாலு,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ கே பி சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆர்பி உதயகுமார் பேசியதாவது, தமிழக அரசியலில் வெத்து விளம்பரம் வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி நாக்கில் நாக்கு இல்லாத வகையில் அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிகிறார்

எடப்பாடியார் மீது அவதூறு பரப்பி ஆதாரமில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம் தகுதி வேண்டும் ஆனால் அண்ணாமலை பெற்றுள்ளாரா ? எதுவும் இல்லை கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது

எடப்பாடியாரை பற்றி நாக்கூசாமல் அவதூறு பரப்பு வருவதை சாமானிய தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடப்பாடியார் 50 ஆண்டு கால பொது வாழ்வில் ஆற்றிய சேவை மறைக்க முடியாது கிளைக் கழக செயலாளர் தொடர்ந்து 50 ஆண்டு காலம் கழகத்தில் பணியாற்றி அம்மாவின் அமைச்சரவையில இருந்து சேலத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்தார்

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து தமிழகத்திற்கு சேவைகள் செய்தார் அவர் செய்த சாதனைகளை பட்டியலுக்கு சொல்ல முடியும் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவ கனவை நினைவாக்கி வரலாற்றில் இடம் பிடித்தார்

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், குடிமராமத் திட்டங்கள், தமிழகத்தின் சாலைகளை மேம்படுத்தினார், உயர் பாலங்கள் மேம்பாட்டு வளர்ச்சிங்கள் என கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு சேவை செய்தார்

2 கோடி 18 லட்சம் குடும்பங்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார் கொரோனா காலங்களில் தன் உயிரை துச்சமாக மதித்து 32 வருவாய் மாவட்டத்திற்கு சென்று மக்கள் உயிரை காப்பாற்றினார்

தடுப்பூசி கண்டுபிடிக்க காலத்தில் கூட தடுப்பு நடவடிக்கை எடுத்தார் அதையெல்லாம் மறைக்கும் விதமாக இன்றைக்கு அண்ணாமலை அவதூறு பிரச்சாரத்தை பரப்புகிறார் சாமானியரான எடப்பாடியார் உழைப்பால்,கருணையால் 8 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார் இதை அரசியல் காழ் புரட்சி காரணமாக அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள என்று சில நடுநிலையாளர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு நினைக்கிறார். அவர் ஆற்றிய பணிகள், தியாகம், உழைப்பு உள்ளதா எதுவும் இல்லை

ஏற்கனவே அரவக்குறிச்சியில் நின்று தோற்றுப் போனார் அதனை தொடர்ந்து கோவையில் பல கோடி வாரி இறைத்து பல்வேறு வார்த்தை ஜாலம் வித்தைகளை காண்பித்தார் மக்கள் அதை நிராகரித்து விட்டனர் ஆனால் இன்றைக்கு பிஜேபி வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லி விவாதத்தில் நடத்துகிறார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் ,உள்துறை அமைச்சர் அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான் காரணம்

கடந்த 2014 ,2019 நடைபெற்ற தேர்தலை பார்க்க வேண்டும் பாரத பிரதமர் வாரணாசியில் கடந்த 2019 போன்ற காலங்களில் ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஆனால் தற்பொழுது 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அதுவும் 3, 4 சுற்று பின்தங்கி அதன் பின் தான் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி பிடித்தது தற்பொழுது மெஜாரிட்டி இடம் கூட பிடிக்க முடியவில்லை கூட்டணி தேவால்தான் தற்பொழுது ஆட்சி பிடித்துள்ளனர் அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்கள் அரைவேக்கட்டுத்தனமாக தனமாக அவதூறு செய்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதுதமிழக மக்கள் மட்டுமல்லாத இந்திய மக்களே தீர்ப்பு தந்துள்ளனர்

அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொண்டது அதில் தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டும், புதிய திட்டங்கள் கொண்டுவர வேண்டும் தமிழக உரிமையை அழுத்தம் இல்லாமல் தமிழக உரிமையை காத்திட வேண்டும் என்று எடப்பாடியார் தலைமையில் களம் கண்டோம்

ஏற்கனவே 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து வைத்தோம் ஆனால் தற்போது 40 தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டோம் 2019 தேர்தலில் 19 39 வாக்கு பெற்றோம் தற்பொழுது 20. 46 பெற்று ஒரு சதவீதம் அதிகரித்துள்ளோம தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் முன்னிலை படுத்தி தான் வாக்குகள் கிடைத்தது அண்ணாமலை முன்னிலைபடுத்தி ஒரு வாக்குகள் கூட யாரும் போடவில்லை

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் பாமக, பாரிவேந்தர் டிடிவி தினகரன், சரத்குமார், ஓ பி எஸ், ஜான்பாண்டியன
ஆகியோர் கூட்டணி வைத்தனர் இருந்தும் கூட வாக்கு குறைந்துள்ளது உள்ளது எடப்பாடியார் கண்ணாடி பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார் முதலில் அண்ணாமலை அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும் அப்போதுதான் அவருக்கு புரியும்

பிஜேபியில் தற்போது கிரிமினல் பின்புறம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள் தற்போது அவர்கள் மீது கைது வழக்கு என்று வருகிறது பிஜேபியில் உழைத்த மூத்தவர்கள் அனுபவிப்பவர்கள் எல்லாம் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார்

கிராமத்தில் பழமொழி சொல்வார்கள் முதலீடு போடாமல் லாபம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும் அதே போல் இன்றைக்கு அண்ணாமலை எந்த முதலீடு சேவை செய்யாமல் உழைப்பு இல்லாமல் தியாகம் செய்யாமல் முதலீட்டை அறுவடை செய்ய நினைக்கிறார் அவருக்கு எப்போதும் ஏமாற்ற தான் கிடைக்கும்

அதிமுக மீது அவருக்கு ஏன் அக்கறை அதிமுகவை புரட்சித்தலைவர் 1972 ஆம் ஆண்டு இயக்கத்தை தொடங்கியபோது கொடியில் அண்ணா படத்தை பொறித்தார் அண்ணாவின் கொள்கையை கொண்ட அண்ணாயிசத்தை உருவாக்கினார் ஆனால் அண்ணாவைப் பற்றிய அண்ணாமலை தவறாக பேசினார் அதேபோல் எட்டு கோடி மக்களின் தெய்வமாக அம்மாவை அவதூறாக பேசினார் அவரது இல்லத்தரசிக்கு ஒப்பிட்டு பேசினார் தலைமை கழகம் சார்பில் கண்டனம்தெரிவித்தோம்

இப்படி செய்தால் எப்படி இவர் மீது நாங்கள் தொடர்ந்து பயணம் செய்ய முடியும் ஆனால் அண்ணாமலை பாரதப் பிரதமடம் வலதுபுறத்தில் உட்கார வைத்தோம் என்று கூறுகிறார் இதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் உட்கார வைத்துவிட்டு அதிமுக அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் அண்ணாமலை அவதூறாக பேசுகிறார்

எடப்பாடியார் தமிழக உரிமை காக்க வேண்டி தான் உழைத்து வருகிறார் இதே அண்ணாமலை தமிழகத்திற்கு என்ன செய்தார் தமிழகத்திற்கு நிதிய பெற்று தந்தாரா, நிவாரண நிதியை பெற்று தராத கையாள அண்ணாமலை தான் உள்ளார்

எடப்பாடியார் மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டுவந்தார். அதேபோன்று கொண்டு வந்தாரா சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி கொண்டு வந்தாரா அண்ணாமலை

நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி குண்டாறு திட்டம் போட்ட திட்டங்களுக்கு எடப்பாடியார் அடிக்கல் நாட்டினார் அதற்கு அழுத்தம் கொடுத்தாரா இன்று வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இரண்டாம் கட்ட நிதி வரவில்லை அந்த நிதியை அண்ணாமலை பெற்று தந்தாரா

சென்னை தூத்துகுடி போன்ற மாவட்டங்களில் கடுமையான மழை பெய்த போது அதற்கு மழை நிவாரண நிதி பெற்று தந்தாரா? வாய்சவுடால் பேசுவதால் எந்த நன்மை ஏற்படப் போகவில்லை இன்றைக்கு மேகதாது அணைகட்ட முயற்சிக்கிறார்கள் முல்லைப் பெரியாரின் அணைகட்ட முயற்சிக்கிறார்கள் பாலாறு குறுக்கே அணைக்கட்டும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் மத்திய அரசு தற்போது வாய் திறக்கவில்லை காவேரி உரிய நீர் பெற்று தர மத்திய அரசு வாய் திறக்கவில்லை இதற்கு அண்ணாமலை என்னதான் செய்தார்

அண்ணாமலை பேராசை காட்டி வருகிறார் அறிவுகெட்டத்தனமாக கேள்வி எழுப்புகிறார் கிராமத்தில் சொல்லுவார்கள் காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும் என்று அதேபோல் எடப்பாடியார் மக்கள் சேவையில் செய்து காய்ந்த மரம் அதனால் அவர் மீது பழிகளை சுமத்துகிறார்கள் அண்ணாமலை சூழ்ச்சி என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் அண்ணாமலை சுற்றி சுற்றி சூழ்ச்சி ஏற்படுத்துகிறார் அவர் சூழ்ச்சி என்ற வலை விரிக்கிறார் அவர் இருக்கும் வழியில் தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள்

அதிமுகவை தமிழக மக்கள் கைவிட மாட்டார்கள் இன்றைக்கு அதிமுகவே எடப்பாடியார் காப்பாற்றி வருவதை சிலர் கபளீகரம் செய்ய முயற்கிறார்கள் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் உள்ளார் அண்ணாமலை எடப்பாடியாரை பற்றிய பேச்சுக்கு வாபஸ் வாங்க வேண்டும் இல்லை என்றால் அண்ணாமலைக்கு எதிராக சில சிறை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்

அதிமுக பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் பிஜேபி உறுப்பினரா அல்லது அதிமுக உறுப்பினரா

நீங்கள் சிறையில் தள்ளிய தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆசை வார்த்தையை கூறினீர்கள் ஒருபோதும் உங்கள் சூழ்ச்சி எடுபடாது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவு எடுக்கவில்லை சென்னையில் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் கருத்துக் கேட்டுதான் எடப்பாடியார் முடிவெடுத்தார் தான் அண்ணா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவதூறாக பேசியது மறந்து மானம் வெட்கமில்லாமல் வெட்கமில்லாமல் எப்படி நாங்கள் கூட்டணி வைக்க முடியும்

கூட்டணி இருக்கும் பொழுதே புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் பேசுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அண்ணாமலை யாரையும் வாழ வைக்கவில்லை அவரை வாழவாட்டியாக தான் செய்கிறார்

ஈரோடு தேர்தலை பற்றி அண்ணாமலை பேசியுள்ளார் ஓபிஎஸ் அணியில் போட்டியிட்ட வேட்பாளரை எங்களுடன் இணைந்து எங்கள் ஆதரவு கொடுத்த போட்டோ என்னிடம் உள்ளது பொதுவாக இரண்டு தலைவர்கள் பேசும் கருத்துக்களை ரகசியமாக வைக்க வேண்டும் ஆனால் அரசியல் நாகரீகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இதே போன்று டெல்லி தலைமை அண்ணாமலையிடம் பேசியதை தனக்கு ஆபத்து வரும்போது கூட வெளியிடுவார் இதனால் டெல்லி தலைமைக்கு கூட அண்ணாமலை ஆபத்துக்கு கூட இருக்கிறது

தொடர்ந்து எலும்பு இல்லாத நாக்காக அண்ணாமலை பேசினால் தொண்டர்களே வெகுண்டு எழுவார்கள் அரவே கருத்தனமாக வார்த்தைகளை சிதற விடுவதால் அதிமுக இந்த பின் வழக்கு ஏற்படப் போவதில்லை தமிழ்நாடு மக்கள் எடப்பாடி பக்கம் உள்ளார்கள்
அண்ணாமலையார் தாங்க முடியாது

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…