ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கூலிப்படை தலைநகராக சென்னை.. ‘காவல்துறையிலும் கருப்பு ஆடுகள்’ – அண்ணாமலை சாடல்
Author: Vignesh9 ஜூலை 2024, 11:30 காலை
ஒரு மிகப் பெரிய அரசியல் கட்சி தலைவர் படுகொலை தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை, நடந்திருக்கக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்திக்க உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து வேங்கை வயல் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வரை என 17 சம்பவங்களை பற்றி தேசிய பட்டியல் இன ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடம் பாஜக சார்பில் முறையிட உள்ளோம்.
தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை,கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது,சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் திமுகவின் கை பாவையாக காவல்துறையினர் மாறிவிட்டனர் என்றும் அண்ணாமலை குற்றச்சாட்டு, தமிழக காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொண்டு அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டத்தை வகுத்து மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிப்பது தான் முக்கியம்…இதற்காக தான் பாஜக விசாரணை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்கிறோம்…
ஆமை வேகத்தில் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கையாளப்படுகிறது, முதலமைச்சரிடம் தற்போது வரை புலி பாய்ச்சல் இல்லை,இனிமேலாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்…
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில்
சென்னை, அயனாவரத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஆம்ஸ்டிராங் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றிருந்ததன் காரணமாக அஞ்சலி செலுத்தாத அண்ணாமலை, அயனாவரம் இல்லத்தில் மறைந்த ஆம்ஸ்டிராங்கின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆம்ஸ்டிராங் படுகொலை போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடந்திருக்க கூடாது. இதுவரை நடந்ததில்லை. முதன்முதலாக சென்னையில் ஒரு அரசியல் தலைவர் அவரது சொந்த இடத்தில் கூலிப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இந்த படுகொலை குறித்து தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். ஆம்ழ்டிராங் படுகொலை தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் நாளை பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். ஆம்ஸ்டிராங் கொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.
கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்தும், வேங்கை வயல் முதல் ஆம்ஸ்டிராங் படுகொலை, பாஜக பட்டியலின தலைவர்கள் என 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியல் இன ஆணையத்திடம் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் புகார் அளிக்க உள்ளோம்.
மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கிறோம். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த உள்ளோம். ஆம்ஸ்டிராங் அவர்களின் தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
சித்தாந்தத்தில் நேர் எதிராக இருந்தாலும் இந்த படுகொலையை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் இந்த படுகொலை செய்தியை கொண்டு செல்ல உள்ளோம். இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிரமாக உள்ளோம்.
ஆம்ஸ்டிராங் படுகொலை சம்பவங்களை கவனிக்கும் போது அனைத்து திட்டங்களும் முன்பே திட்டமிடப்பட்டு கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்து சரணடைந்துள்ளார்கள்.
இதற்கு பின்னால் உள்ள அரசியல் மற்றும் உதவிக்கான காரணங்களை ஆராய வேண்டிய சூழல் உள்ளது. சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதாள பாதாளத்தில் உள்ளது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை தீவிரமாக நினைக்காமல் எதனை தீவிரமாக நினைக்கிறார் எனத் தெரியவில்லை…
முதலச்மைசாரின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில்தான் நடைப்பெற்று வருகிறது. முதலமைச்சரின் நடவடிக்கைகள் புலிப்பாய்ச்சல் நடவடிக்கைகளாக இல்லாமல் உள்ளது. முதலமைச்சர் இப்போதாவது விழித்துக் தமிழகத்தில் கூலிப்படைகளுக்கு இடமில்லை என்கிற நிலையை கொண்டுவர தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்…
முதலமைச்சர் அவர்களே தார்மீக பொறுப்பேற்று சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…யார் திட்டமிட்டு மூளையாக இந்த கொலைக்கு செயல்பட்டார்கள் என்று தெரியவரட்டும் சி பி ஐ க்கு கொடுங்கள். காவல்துறை மீது அழுத்தம் அளித்தால் மாநிலம் காவல் அதிகாரிகளின் அதிகாரமிக்க மாநிலமாக மாறிவிடும். தமிழகம் அப்படியாகிவிடக் கூடாது.
எண்கவுண்டர் பானி எல்லாம் இப்போது இல்லை. ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய குற்றவாளிகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை போலீசார் தொடர்புக் கொண்டு குற்றவாளிகளை சரண்டரடையக் கூறும் நிகழ்வுகள் நடக்கின்றன. சரண்டர் வழக்குகளில் குற்ற்வாளிகளுக்கு எளிதாக ஜாமிம் கிடைத்து விடுகிறது.
காவல்துறையின் அடிப்படை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
அடிப்படை பணிகளை வலுவாக்க வேண்டும். தோட்டாக்கள் மூலம் குற்றவாளிகளை அடக்க நினைத்தால் மீண்டும் குற்றவாளிகள் உருவாகுவார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக-க்கு தொடர்பு இருக்கிறது என்ற செல்வப் பெருந்தகை இன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, செல்வப் பெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எனக்கு அது குறித்து தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை.
ஆருத்ரா விவகாரத்திலும் அது தொடர்பாக ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிலும் பாஜகவினர் தொடர்பு உள்ளதாக எழும் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் பாஜகவின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் தொடர்பு உள்ளது என்பதற்கு கட்சியின் பதிவுகளில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி ஏதாவது ஆதாரத்தை அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார். பொதுவாக கொலை செய்பவர்கள், கொலை செய்யக் கூறுபவர்கள் இடையே ஒருவருக்கொருவர் தொடர்பற்றவர்கள்.
ஆம்ஸ்டிராங் படுகொலையில் அரசியல் காரணம் இருக்கிறது, இதற்கான மூளை யார் என்பதை விசாரிக்க வேண்டும். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பில் தவறுவிட்டது ஏன்? கொலை செய்யக் கூறியவர்கள், உதவியவர்கள், அதன் தலைவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மாயாவதியும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். காவல்துறை விசாரணை செய்வதில்லை. சரணடையத்தான் கூறுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாகவே காவல்துறை அப்படித்தான் செயல்படுகிறது. காவல்துறையின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. வழக்குகள் அதிகமாக உள்ளது. புதிதாக வருபவர்கள் சரியான அணுகுமுறையில் இல்லை. காவல்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளை மாற்றினால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. காவல்துறையில் 99% பணிகளை கீழ்மட்ட காவலர்கள் உள்ளனர். சரண்டர் தற்போது இயல்பாக நடக்கிறது. அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்பட வேண்டும்.
ஒரு சில காவல் அதிகாரிகள் திமுகவின் கை பாவையாக மாறி இருக்கிறார்கள்… நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் பழிக்கு பழி வாங்க மாட்டோம் திருத்தம் மேற்கொள்வோம் என கூறினார்.
தமிழகத்தில் தலித்கள் மீதான கொலைகளும், வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் பாஜகவில் வளர்ந்து வரும் பட்டியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனை காவல்துறை முன்பகை எனக் கூறி முடிக்க பார்க்கிறது. அவையெல்லாம் முன்பகை அல்ல அரசியல் கொலைகள்.
காவல்துறையில் சில அதிகாரிகள் திமுகவின் கைப்பாவையாக உள்ளனர். காவல்துறையின் மறுசீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் 14 நாட்களில் 134 கொலைகள் நடந்துள்ளன. ஒரு நாட்களுக்கு 7/8 கொலை சராசரியாக நடைப்பெற்றுள்ளன. தமிழகத்தில் இந்த சூழல் அபாயகரமானது. முதலமைச்சர் காவல்துறையை மறுசீரமைத்து சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
0
0