சொன்னபடி செய்த அண்ணாமலை.. திமுக ஐடி விங்கைத் தேடும் பாஜகவினர்!

Author: Hariharasudhan
21 February 2025, 9:39 am

Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அண்ணாமலை, சமூக வலைத்தள மோதலை திமுகவிற்கு எதிராக துவக்கியுள்ளார்.

சென்னை: #GetOutStalin என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றியது,

கடனாளி மாநிலமாக்கியது, சிதிலம் அடைந்த கல்வித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை, சாதி, மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்ற நிலையில் திமுக அரசை மக்கள் விரைவில் அகற்றுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையின் சவால்: நேற்று சேலத்​தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “வருகிற பிப்ரவரி 26ஆம் தேதிக்​குப் பிறகு தமிழகத்​தில் இருப்​பேன். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி கேட்​டபடி, சென்னை அண்ணா சாலைக்குத் தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்​துக்கு, என்ன நேரத்​தில் வர வேண்​டும் எனக் குறிப்​பிட்டுச் சொல்​லுங்​கள்.

Annamalai Starts Get Out Stalin

திமுக ஐடி விங் மற்றும் அரசு இயந்​திரங்​களைப் பயன்​படுத்தி, எக்ஸ் தளத்​தில் ‘Get Out Modi’ என்று டிரெண்டிங் செய்​துள்ளனர். ஸ்டா​லின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்​டும் என ‘Get Out Stalin’ என எக்ஸ் தளத்​தில் பதிவிடப்​ போகிறோம். யார் அதிகமாக டிரெண்டிங் செய்​தனர் என்ப​தைப் பார்த்து​விடு​வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?

இந்த நிலையில்தான், இன்று காலை சரியாக 6 மணிக்கு அண்ணாமலை Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்று திமுக தரப்பில் எந்தவித முன்னெடுப்பும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், கடந்த ஓரிரு நாட்களாகவே திமுக ஐடி விங் தரப்பில் Get Out Modi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, திமுகவினரும் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!