Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அண்ணாமலை, சமூக வலைத்தள மோதலை திமுகவிற்கு எதிராக துவக்கியுள்ளார்.
சென்னை: #GetOutStalin என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றியது,
கடனாளி மாநிலமாக்கியது, சிதிலம் அடைந்த கல்வித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை, சாதி, மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்ற நிலையில் திமுக அரசை மக்கள் விரைவில் அகற்றுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் சவால்: நேற்று சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “வருகிற பிப்ரவரி 26ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் இருப்பேன். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி கேட்டபடி, சென்னை அண்ணா சாலைக்குத் தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்துக்கு, என்ன நேரத்தில் வர வேண்டும் எனக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.
திமுக ஐடி விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘Get Out Modi’ என்று டிரெண்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘Get Out Stalin’ என எக்ஸ் தளத்தில் பதிவிடப் போகிறோம். யார் அதிகமாக டிரெண்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?
இந்த நிலையில்தான், இன்று காலை சரியாக 6 மணிக்கு அண்ணாமலை Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்று திமுக தரப்பில் எந்தவித முன்னெடுப்பும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், கடந்த ஓரிரு நாட்களாகவே திமுக ஐடி விங் தரப்பில் Get Out Modi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, திமுகவினரும் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.