’ஞானசேகரன் திமுக நிர்வாகி..’ – திமுகவின் பலே திட்டம் இதுதான்.. போட்டோவோடு போட்டுடைத்த அண்ணாமலை!

Author: Hariharasudhan
26 December 2024, 9:52 am

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன.

மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார். அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.

Annamalai about Anna University Sexual assault accused and condemns DMK Govt

    தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.

    தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு.

    எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

    இதையும் படிங்க: அஸ்வினுக்கு பதில் இனி இவரா..ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றியை ருசிக்குமா..!

    முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக சாலையோர பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் என விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனுக்கு ஜனவரி 8 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு உள்ளதால், சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்படு உள்ளது.

  1. Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  2. Views: - 104

    0

    0

    Leave a Reply