தமிழகம்

மிரட்டலுக்கு எல்லாம் பாஜக பயப்படாது.. அதானி ஆதாரம் வெளியிட்ட அண்ணாமலை.. பூச்சாண்டி காட்டும் செந்தில் பாலாஜி!

திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை வழக்கு தொடருவோம் என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில் செந்தில் பாலாஜி பேசியிருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.

திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, ‘வழக்கு தொடருவோம்’ என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமீன் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி, தனது வார்த்தை விளையாட்டின் மூலம், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார்.

ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே, ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் ஜாமீன் அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021 ஆம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.

அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், 5.205 கோடி, தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூடப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா?

உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமீன் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக, அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, எந்த அடிப்படையில், ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்?

இதையும் படிங்க: “அதிமேதாவிகள்.. தற்குறிகள்”.. விஜயை வெளுத்து வாங்கிய சேகர்பாபு!

மத்திய அரசிடம் மட்டுமே சூரிய ஒளி மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ९. 2.61 என்ற விலையில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், வேறு தனியார் நிறுவனங்களிடம் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறிவிட்டு, நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில் மின்சாரம், யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் ரூ.5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர்.

இந்த தனியார் நிறுவனங்களில் அதானி நிறுவனம் உள்ளதா இல்லையா? திமுகவின் வரலாறும், ஜாமீன் அமைச்சரின் வரலாறும் உலகறிந்த உண்மை. எனவே, திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கேள்வி எழுவது இயல்பு. அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்தான் செய்யும். அதற்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை.

அதை விடுத்து, வழக்கு தொடருவோம் என்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம், எந்தத் தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதற்கு எல்லாம் தமிழக பாஜக பணிந்து செல்லாது என்பதையும் ஜாமீன் அமைச்சருக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, நேற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்​க​வும் இல்லை. அதானி நிறு​வனத்​துடன் நேரடியாக சூரிய ஒளி மின்​சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பிற மாநிலங்​களைச் சேர்ந்த மின்சார வாரி​யங்​களைப் போல தமிழ்​நாடு மின்​வாரிய​மும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்​பரேஷன் ஆஃப் இந்தியா நிறு​வனத்​துடன் மட்டுமே மின்​சாரம் கொள்​முதல் செய்து வருகிறது” எனக் கூறியிருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

4 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

5 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

6 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

6 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

7 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

7 hours ago

This website uses cookies.