பாஜக மீதான விமர்சனங்களுக்கும், பாஜகவின் சாதனைகளையும் தொலைக்காட்சி மற்றும் சமூகவலை தளம் மூலமாக தகுந்த பதிலடி கொடுத்து வந்தவர் கே.டி. ராகவன், இவர் பாஜகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார்.
அப்போது பாஜக பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் தவறாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. மேலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து கொண்டு தவறாக செயல்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ராகவன், மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்ததையடுத்து நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!” என கே.டி.ராகவன் தெரிவித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆபாச வீடியோ பிரச்சனையில் சிக்கிய அவர் இதில் ஏற்பட்ட சர்ச்சையில் தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வந்தார்.
அவ்வப்போது பாஜகவினரின் செயல்பாடுகளுக்கு சமூக வலை தளத்தில் பாராட்டு மட்டும் கூறிவந்தார். இந்த நிலையில் ராகவனுக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது பாஜகவினர் கே.டி,ராகவனின் உடல்நிலை குறித்து நேரிலும் தொலைபேசியிலும் விசாரித்தனர். இந்தநிலையில் சென்னையில் கே.டி.ராகவன் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்ற அண்ணாமலை, கே.டி.ராகவன் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தமிழக பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அவர்களின் புதிய இல்லத்தின் கிரகப் பிரவேச நிகழ்வில் கலந்து கொண்டு, அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு கே.டி.ராகவன் நன்றி தெரிவித்து ரீ டுவிட் செய்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.