ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம்னு சொன்ன அண்ணாமலை ₹4 கோடி பற்றி பதில் சொல்லணும் : சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 8:14 pm

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்

அப்போது அவர் பேசுகையில், போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர தீர்வை காணவில்லை. எங்களை நாடு ரோட்டில் வெயிலில் போட்டதை தவிர மக்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்.

10 ஆண்டு ஆட்சியில் பாஜக நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தாய் என சொல்லுங்க பார்போம். நான் இப்படியே பிறந்த ஊருக்கு போயிடுரே கட்சியை நடத்த மாட்டேன்.

ஆந்திராவில் செம்மர கட்டை வெட்டியதாக கூறி 20 தமிழர்கள் அம்மாநில அரசு சுட்டுகொன்ற போது அதிமுகவும், திமுகவும் வேடிக்கை தான் பார்த்தது வேறு என்ன செய்தது.

கர்நாடகாவில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட்டு கொடுத்து இங்கு தேர்தலை சந்திக்கிறது திமுக. அதை எதிர்த்து கேட்க தெம்பு இல்லை. இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்றும் தெரியவில்லை.

முதன் முதலில் இசுலாமிய தீவிரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி அவர்கள். ஆனால் இன்றைக்கு இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள். என்ன பாதுகாவலர்கள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காமல் உள்ளே அடைத்து வைத்துள்ளது தான் இவர்களது பாதுகாப்பா. இவர்களா இசுலாமிய காவலர்கள்?

பின்னர் அவர் அளித்த பேட்டியில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடமிருந்து சுமார் 3 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பினார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.

திமுக வேட்பாளர் கதிர் அண்ணன் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்ளவார்களா? கதிர் ஆனந்த் இதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவருடைய அப்பா துரைமுருகன் சொல்கிறார். நாடாளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிந்தில் தான் பேச வேண்டும் எற அப்படி என்றால் தமிழை ஆட்சி மொழியாகும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா?

நீங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியே தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களுக்கு எல்லாம் ஹிந்தியில் தான் பெயர் வைத்துள்ளது அதையும் இவர்கள் கேட்க மாட்டார்கள்.

தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். இதுவரை காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தது என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா?

ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள்? இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கிறார்கள் இதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது அது ஊழல் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில் instagram பக்கம்தான் அரசியல் உள்ளது என அண்ணாமலை பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் பேசியதாலேயே டிக் டாக் ஐ போன்று இதையும் தடை செய்து விடுவார்கள் போல. கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை பரப்புகிறோம் என்கிறார்கள் இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். விட்டா இமெயில், இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பிருக்கு?

இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. மேலும் அதில் பயணிக்கும் எங்கள் பெண்களையே அவதூறாக பேசுகிறார்கள் இதுதான் திமுகவின் பெண்ணிய உரிமையா? என்றும் சீமான் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்