அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை.. நேருக்கு நேர் மோத தயாரா? 30 பேர் கொண்ட லிஸ்ட் தயார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 6:34 pm

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை.. நேருக்கு நேர் மோத தயாரா? 30 பேர் கொண்ட லிஸ்ட் தயார்!!!

செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்கள் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால் இதுபோன்ற விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் பாஜகவினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், ஊடக விவாதங்களில் தமிழக பாஜக சார்பாக 30 பேர் அடங்கிய மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!