பாஜகவில் மற்றவர்களை அண்ணாமலை வளரவே விடமாட்டாரு… அவர் தலைவராக தொடரக்கூடாது : கல்யாண ராமன் போர்க்கொடி!
Author: Udayachandran RadhaKrishnan8 June 2024, 11:23 am
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இருப்பினும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி நீடித்திருந்தால் பல இடங்களில் இரு கட்சிகளுமே வெற்றி பெற்றிருக்கும் என இரு கட்சி நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு தலைவரான கல்யாண ராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கலகத்தில் தான் நீதி பிறகும் என்பார்கள். அண்ணாமலை தனக்கு என்று டெல்லியில் ஒரு சூழலை உருவாக்கி வைத்துள்ளார். இதுதான் அவரை பாதுகாப்பாக வைத்துள்ளது.
மேலும் படிக்க: மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இனி நான் அதை செய்ய மாட்டேன்.. பிரசாந்த் கிஷோர் வருத்தம்!
பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, இல.கணேசன் உள்பட கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழிசை செளந்தரராஜன் சொன்ன கருத்திற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கம் போல் தேசிய தலைமையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் எனவும், அவரிடம் சிறிது கூட அறம் என்பது கிடையாது எனவும் பாஜக நிர்வாகி கல்யாண் ராமன் தனது எக்ஸ் பதிவு மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.