ரேஷன் கடையில் பிரதமர் மோடி படத்தை மாட்டிய அண்ணாமலை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…கோவையில் சுவாரஸ்யம்..!!

Author: Rajesh
13 April 2022, 11:42 pm

கோவை: நியாயவிலைக் கடை ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகில் மோடியின் புகைப்படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாட்டிய காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கோல்ட்வின்ஸ் துரைசாமி நகர் ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலினின் படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதன் அருகில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அண்ணாமலை மாட்டிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!