அன்னூர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரியும் பெண்களின் தில்லாலங்கடி வேலை குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஏபிஜே நகர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக 5 பெண்கள் கொண்ட கும்பல் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் காய வைக்கும் பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை பட்டப்பகலிலேயே திருடிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், நாகம்மாபுதூர் பகுதியில் சுற்றிய மூன்று பெண்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருடிச்செல்லும் வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை பெண்கள் திருடிச்செல்வது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.