காவு வாங்கும் மேம்பாலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விபத்து : வாகன ஓட்டிகள் திக்..திக்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2025, 2:29 pm

கோவை ராமநாதபுரம் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு உள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து சென்ற ஆம்புலன்ஸ் உள்பட நான்கு வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதையும் படியுங்க: ராமாயணமா விடாமுயற்சி?.. மகிழ் திருமேனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

விபத்துக்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்னாள் சென்ற மாருதி கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது தெரியவந்து உள்ளது.

Accident

விபத்தில் மூன்றாவதாக பெருந்துறையில் இருந்து நோயாளியை கோவை அரசு மருத்துவமனைக்கு ஏற்றிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Accid

முன்னாள் சென்ற கார் எதற்காக சடனாக பிரேக் பிடித்து நிப்பாட்டப்பட்டது என்பது குறித்தான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் 20 நிமிடங்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ளது.

Cbe Accident

அந்த வாகனங்களை மீட்கும் பணியில் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

  • Dragon Tamil movie worldwide collection தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!