மேலும் ஒரு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2024, 1:30 pm
மேலும் ஒரு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!!
கள்ளக்குறிச்சி தனிதொகுதியின் கடந்த 2016 – 2021 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பிரபு மேலும் இவர் தற்போது அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2016 – 2021ம் ஆண்டு பிரபு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் இவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் என மொத்தம் 9 இடங்களில் குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது உறவினரான பன்னீர்செல்வம் என்பவரது மகன் சுபாஷ் வீட்டிலும் இன்று காலை 8 மணிக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
0
0