தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா… சென்னையை ஓரங்கட்டி டாப்பில் வந்த மற்றொரு மாவட்டம் : இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 8:39 pm

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதனால், தமிழகதித்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது. மாவட்ட அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி