சீமானின் ஆவேசப் பேச்சு தம்பிகளிடம் எடுபடவில்லையா? அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Author: Hariharasudhan
19 November 2024, 2:02 pm

நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.

சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி என்ற பிரிவு உள்ளது. இந்த நிலையில், நாதகவின் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் சேலம் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதேநேரம், தலைவரின் (சீமான்) வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் எனவும் வைரம் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, சேலத்திலும் அதன் நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம் என்ற தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று (நவ.19) தனது முகநூலில் தெரிவித்து விட்டு விலகிச் சென்றார். இன்று அதே சேலம் மாநகர் மாவட்ட அளவில் வேறு ஒரு அணியின் முக்கிய நிர்வாகி விலகியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SEEMAN ANGRY

மேலும், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டலப் பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபரில் விலகினர். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் கூண்டோடு கம்பி நீட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!

இவ்வாறு அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நாதக நிர்வாகிகள் கூறுகையில், “நாங்கள் பல வருடமாக கட்சியில் இருக்கிறோம். ஆனால், எங்களை அவர் (சீமான்) கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பேச விடுவதில்லை. எங்களுக்கான மரியாதை கிடைப்பதில்லை” என ஆதங்கத்தைக் கொட்டுகின்றனர்.

மேலும், இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் நினைவுகூரத்தக்கது.

  • Actor Removed From Thalapathy 69 தளபதி 69 படத்தில் இருந்து பிரபலம் திடீர் நீக்கம்… அரசியல் காரணமா? விஜய் மறைமுக உத்தரவு!
  • Views: - 53

    0

    0