பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய மற்றொரு வாகனம் : தூக்கி வீசப்பட்ட நபர் பரிதாப பலி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 2:47 pm

மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் பங்கில் பெட்ரோல் போட வந்த முதியவரின் டூவீலர் மீது மற்றொரு டூவீலர் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் மார்கெட் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது எக்ஸ்.எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அன்னூர் சாலையில் திரும்பியுள்ளார்.

அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் பழனிச்சாமியின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த பழனிச்சாமியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!